பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்களின் இணைப்புச் செயலாளராக தேசமான்ய இர்ஷாத் ரஹ்மத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.


முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹிமீன் இணைப்பு செயலாளராக  புத்தளத்தை சேர்ந்த இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.


இர்ஷாத் றஹ்மத்துல்லா என்பவர் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் சிறந்த அறிவிப்பாளராகவும் நீண்டகாலமாக பணியாற்றிவந்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றுள்ள இவர் நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியினை மேற்கொண்டவரும் ஆவார்.


சிறந்த மொழியாற்றல் கொண்ட இர்ஷாத் றஹ்மத்துல்லா சிறந்த மொழிப் பெயர்பாலருமாவார் தேசமான்ய மற்றும் தேசகீர்த்தி  போன்ற பட்டங்களை பெற்று சமூகத்தில் நன்மதிப்புக்குட்பட்டவராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

 

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் சிறந்த  தொடர்படல் உடையவராகவும் சர்வதேச அரச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுக்கான மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இவர் moonfm மின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஆவார் 


பன்முக ஆளுமைகொண்ட இர்ஷாத் ரஹ்மத்துல்லா அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....