சாரதி விபத்து புத்தளம் மன்னார் வீதிபுத்தளம் மன்னார் வீதியின் புதுப்பள்ளி சந்தியில் இன்று  (2020-05-24) அதிகாலை சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

மினுவாங்கொடையில் இருந்து வண்ணாத்தவில்லு பகுதிக்கு மாம்பழம் கொள்வனவு செய்ய வந்த லொறியின் டயர் வெடித்ததினாலேயே மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது.

இன்று  காலை 6.00 மணியளவில் மேற்படி விபத்து சம்பவம் இடம் பெற்றதினால் பிரதேசத்தின் சிலபகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக புத்தளம பொலீஸார் தெரிவித்தனர்.

படங்கள்-புத்தளம் நிருபர் -