ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கிளையான ஐக்கிய நாடுகள் சங்கம் கொரோனா நோய் பரவும் இத்தருணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 8 பொலிஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கியுள்ளன.

                               
  -ஏ.எஸ்.எம்.ஜாவித் -

ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கிளையான ஐக்கிய நாடுகள் சங்கம் கொரோனா நோய் பரவும் இத்தருணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 8 பொலிஸ் நி
லையங்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கியுள்ளன.

கிரேண்டபாஸ், கொட்டகேன, ஆமர் வீதி, மாளிகாவத்தை, தெமடகொட, மருதானை, வெள்ளம்பிட்டி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. கொரோன நோய் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் பொலிஸாரின் சுகாதாரம் உள்ளிட்ட பாதுகாப்புக்கள் கருதியே இவை வழங்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் தெரிவித்தார்.
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எஸ்.எம்.கல்டெர கிரேண்டபாஸ் பொலிஸாருக்கான பாதுகாப்பு அங்கிகளை சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் மற்றும் சங்கத்தின் செயலாளர் எரேல் சுமதித் ஆகியோரிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார்.
United Nations Association of Sri Lanka will be donating PP Kits and Face Shields to the 8 police Stations in colombo and panadura. Executive Chairman Dr.MMM Rushanudeen > Secretary Mr. Errol Simth and other members participated This Civid 19 Programes.