புத்தளம் நகரத்தில் அலையும் கட்டாக்காளி நாய்கள்

புத்தளம் நகரத்தில் அலையும் கட்டாக்காளி நாய்கள் தொடர்பில் புத்தளம் நகர சபைக்கு உதவி பொலீஸ் அத்தியட்சகர் கடிதம் கடிதம்
புத்தளம் நகரத்தின் கொழும்பு முகத்திடல் பகுதியில் அதிகமான கட்டாக்காளி நாய்கள் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.தற்போது இனம் காணப்பட்டுள்ள கட்டாக்காளியாக திரியும் நாய்களிடத்தில் கொரோனா வைரசு தொற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில்,புத்தளம் நகரத்தில் சுற்றித்திரியும் இவ்வாறான நாய்களினால் இந்த தொற்று பரவலாம் என எமக்குள் அச்சம் ஏற்பட்டுள்ளதால்  இந்த நாய்கள் தொடர்பில் தங்களது கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்டுவதாக புத்தளம் உதவி பொலீஸ் அத்தியட்சகரினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.