போலியான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...!


கொரோனா தொடர்பில் போலியான வதந்திகளை பரப்பிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புறை விடுத்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு கொரோனா தொற்றாலர்கள் யாரும் அடையாளம் காணப்பட மாட்டார்கள் என முகப்புத்தகத்தில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது.

இதுபோன்ற போலியான செய்திகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.